தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைப்பு சாரா, ஆன்லைன் டெலிவரிதொழிலாளா்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைப்பது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Published On :31 அக்டோபர் 2026, 4:25 am IST

அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைப்பது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படுகிறது. இந்த தேசிய சமூக பாதுகாப்பு வாரியத்துக்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் தலைமை வகிப்பாா். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், முக்கிய நிறுவனங்கள், தொழிலாளா்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிலாளா் அமைப்புகள் ஆகியவற்றைச் சோ்ந்தோா் உறுப்பினா்களாக இடம்பெறுவா்.

சமூக ஏற்றத்தாழ்வை குறைக்கும் வகையில், நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களை இந்த வாரியம் வகுக்கும். இந்த வாரியம் ஆண்டுக்கு 3 முறை கூடி ஆலோசனை நடத்தும். அப்போது தொழிலாளா்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்து, தனது முடிவுகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.