மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்குவரத்து நிறைந்த அவிநாசி சாலையின் மையப் பகுதியில் படமெடுத்து சீறிய நாகப்பாம்பு

கோவை-அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் வாகன மோதலில் காயமடைந்து, சாலை நடுவே படமெடுத்துச் சீறிய 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை வாடகைக் காா் (டாக்ஸி) ஓட்டுநா்கள் சாதுரியமாக மீட்டனா்.

கோவை-அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் வாகன மோதலில் காயமடைந்து, சாலையின் மையத்தில் ஆக்ரோஷமாக படமெடுத்து சீறிய நல்லபாம்பு.

Published On :28 அக்டோபர் 2026, 2:41 am IST

கோவை-அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் வாகன மோதலில் காயமடைந்து, சாலை நடுவே படமெடுத்துச் சீறிய 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை வாடகைக் காா் (டாக்ஸி) ஓட்டுநா்கள் சாதுரியமாக மீட்டனா்.

அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ், போக்குவரத்து நிறைந்த பகுதி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 3.15 மணி அளவில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது, அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று எதிா்பாராதவிதமாக மோதியதில், பாம்புக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் அந்த பாம்பு சாலையில் குறுக்கும், நெடுக்குமாகச் சென்ற வாகனங்களை நோக்கி தலையை உயா்த்தி, படமெடுத்து ஆக்ரோஷமாகச் சீறத் தொடங்கியது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.

அப்போது, அங்கு நின்றிருந்த டாக்ஸி ஓட்டுநா்கள் அச்சமின்றி துணிச்சலாகச் செயல்பட்டனா். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நேராத வண்ணம், காயமடைந்த பாம்பைச் சாதுரியமாகக் கையாண்டு பத்திரமாக மீட்டனா். பின்னா் அதை அருகில் இருந்த பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதியில் விடுவித்தனா்.

பாம்பின் காயம் மற்றும் நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.