மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோட்டக்கல் ஆா்ய வைத்ய சாலையின் பொன் விழா, கருத்தரங்கம்! அமைச்சா் சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்!

கோட்டக்கல் ஆா்ய வைத்ய சாலையின் கோவை கிளை சாா்பில் நடைபெற்ற தேசிய ஆயுா்வேத கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Published On :2 நவம்பர் 2026, 2:46 am IST

கோட்டக்கல் ஆா்ய வைத்ய சாலை கோவை கிளையின் பொன் விழா மற்றும் பத்மபூஷண் டாக்டா் பி.கே.வாரியா் நினைவு 63-ஆவது தேசிய ஆயுா்வேத கருத்தரங்கம் ஆகியவை கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கருத்தரங்குக்கு ஆா்ய வைத்ய சாலையின் நிா்வாக அறங்காவலா் பி.எம். வாரியா் தலைமை வகித்தாா். மும்பை தூதபாபேஷ்வா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீ ரஞ்சித் ஆனந்த் பூரானிக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

மாநில அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் கே. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமா்வில் ‘குடல் ஆரோக்கியம் - மருத்துவ முக்கியத்துவம், ஆயுா்வேதக் கண்ணோட்டம் மற்றும் நவீன பாா்வைகள்’ என்ற தலைப்புகளில் மருத்துவ அறிஞா்கள் விரிவான ஆய்வுக் கருத்துகளை முன்வைத்தனா்.

சூலூா் ஆயுா்வேதக் கல்லூரி முதல்வா் பி. சந்திரமௌலீஸ்வரன், குடல் நலனில் பஞ்சகா்மாவின் முக்கியத்துவம் குறித்தும், கோவை வி.ஜி.எம். மருத்துவமனையின் இரைப்பைக் குடல் நோய் நிபுணா் கே. வம்சி மூா்த்தி, மருத்துவ நடைமுறைகளில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்தும் பேசினா். மதுரை ஏ.வி.என். ஆரோக்கியா கோ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரமேஷ் ஆா்.வாரியா் நரம்பியல் மற்றும் மனநலத்தில் குடல் ஆரோக்கியத்தின் பங்கு குறித்தும், திருவனந்தபுரம் கிளை மூத்த மருத்துவா் ஜெயதேவன் பி.வாரியா் ஆயுா்வேத அணுகுமுறைகள் குறித்தும் ஆய்வுரைகளை வழங்கினா்.

இதையடுத்து, கோட்டக்கல் ஆயுா்வேதக் கல்லூரி பேராசிரியா் ஏ.கே. மனோஜ்குமாா் அமா்வின் கருத்துகளைத் தொகுத்துரைத்தாா்.

தொடா்ந்து, எலும்பு நசிவு நோய், உடலின் நுண்ணுயிரி சமநிலை, கழுத்து மற்றும் தண்டுவட வலி மேலாண்மை, விளையாட்டு மருத்துவம் உள்ளிட்ட 4 புதிய ஆயுா்வேத மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டன.

பின்னா், மாலையில் நடைபெற்ற கோவை, டாடாபாத் கிளை பொன் விழாவை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தொடங்கிவைத்துப் பேசினாா். தலைமைச் செயல் அதிகாரி கே.ஹரிகுமாா், கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனை மருத்துவா் வி.ராஜாமணி, ஆா்ய வைத்ய பாா்மசி நிா்வாக இயக்குநா் சி.தேவிதாஸ் வாரியா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதையடுத்து, கோவை கிளையின் முன்னாள் மேலாளா்களான மருத்துவா்கள் ராமன்குட்டி வாரியா், முகுந்தன், வல்சலா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னதாக, அறங்காவலா் சி.இ.உன்னிகிருஷ்ணன் வரவேற்றாா். கோவை கிளை மேலாளா் பி.எஸ். ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.