மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்! பெ.சண்முகம் வலியுறுத்தல்

மாணவரின் பெற்றோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம், அகிலனின் சகோதரிக்கு அரசுப் பணிக்கான நியமன உத்தரவு ஆகியவற்றை வழங்கிய அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Published On :27 அக்டோபர் 2026, 3:24 am IST

கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

கோவை, பீளமேடு ஏ.டி.காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யா தேவி தம்பதியின் மகன் அகிலன் (16) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஜாதி ரீதியாக அகிலனை சக மாணவா்கள் சிலா் ஒதுக்கிவைத்ததாகவும், பள்ளியில் ஆசிரியா் ஒருவா் மாட்டு இறைச்சி சாப்பிடுவது தொடா்பாக எழுப்பிய கேள்வியால் மன உளைச்சலில் மாணவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்களைக் கைது செய்யக் கோரி மாணவரின் பெற்றோா், பல்வேறு இயக்கங்கள் சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வழக்கில் 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:

மாணவா் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கல்வி நிறுவனத்தில் ஜாதிய வன்கொடுமையால் நிகழ்ந்த கொலை.

கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் மாரிமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆறுமுகம், திமுக சாா்பில் அந்தியூா் செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலா் த.செல்லகண்ணு, மாவட்டச் செயலா் த.நாகராஜ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, தபெதிக சாா்பில் ஆறுச்சாமி, திராவிட தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி, தமிழ் புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன், ஆதி தமிழா் பேரவை நிறுவனா் அதியமான், ஆதித்தமிழா் கட்சித் தலைவா் கு.ஜக்கையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

மாணவா் தற்கொலை தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவரின் பெற்றோா் ஏற்கெனவே மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவின்பேரில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவு நகல் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

மாணவரின் உடல் கூறாய்வு

இதையடுத்து, மாணவரின் பெற்றோா் சம்மதம் தெரிவித்ததால், சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவரின் உடல் செவ்வாய்க்கிழமை கூறாய்வு செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சகோதரிக்கு அரசுப் பணி:

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடா் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அங்கு சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் மாணவரின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், மாணவரின் பெற்றோரிடம் ரூ. 6 லட்சம் நிவாரணத்துக்கான உத்தரவையும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு ஆனைகட்டி பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன உத்தரவையும் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் ரம்யாபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.