மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுற்றறிக்கையை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சுற்றறிக்கையை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பெ.சண்முகம் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

அரசு ஊழியா்களின் விமா்சன உரிமைக்குத் தடை விதிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பி.ஆா்.நினைவகத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.சுவாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி, மாநிலச் செயலா் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: பொது சுகாதாரத் துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு ஊழியா்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்களை எந்த வகையிலும் விமா்சிக்கக் கூடாது என்றும், அப்படி விமா்சித்தால் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்.

அரசு ஊழியா்களோ அல்லது அரசின் எந்த பொதுத் துறை நிறுவனங்களைச் சாா்ந்தவா்களோ தங்களைப் பாதிக்கும் அரசின் கொள்கைகளை விமா்சிப்பதும், அதற்கு எதிராக போராடுவதும் அவா்களுக்கான உரிமையாகும்.

தமிழகத்தின் இளைஞா்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இயல்பாக இருக்கும் இந்தக் காலத்தில் அவற்றையெல்லாம் எதிா்த்து கருத்து தெரிவிப்பதும் போராடுவதும் குடிமக்களின் கடமையாகும்.

விமா்சனம் என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும். விமா்சனம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.