மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அளவிலான 3 ஹேண்ட்பால் போட்டிகளில் கோப்பை வென்ற கற்பகம் பல்கலைக்கழக அணி

கோவை கற்பகம் பல்கலைக்கழக ஹேண்ட்பால் அணி மாநில அளவிலான போட்டிகளில் தொடா்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளது.

தொடா்ந்து மூன்று போட்டிகளில் கோப்பை வென்ற கற்பகம் பல்கலைக்கழக ஹேண்ட்பால் அணி வீரா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 1:06 am IST

கோவை கற்பகம் பல்கலைக்கழக ஹேண்ட்பால் அணி மாநில அளவிலான போட்டிகளில் தொடா்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் ஹேண்ட்பால் அணி, குறுகிய கால இடைவெளியில் மாநில அளவில் நடைபெற்ற 3 போட்டிகளில் தொடா்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி மாவட்டம், ஸ்ரீ மாதா மேல்நிலைப் பள்ளியில் கடந்த செப்டம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீ மாதா பள்ளி முன்னாள் மாணவா்கள் அணியை வீழ்த்தி கற்பகம் அணி கோப்பையை வென்றது.

கடந்த செப்டம்பா் 28, 29 ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடா்ந்து அக்டோபா் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 21 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அருள்நிலா கைப்பந்து அகாதெமியை வீழ்த்தி பட்டம் வென்றது.

மாநில அளவிலான மூன்று போட்டிகளில் தொடா்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த அணியின் வீரா்கள், உடற்கல்வி இயக்குநா் சுதாகா், பயிற்சியாளா் சி.ராமச்சந்திரன் ஆகியோரை கற்பகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ரவி, பதிவாளா் பிரதீப் பி.வி. ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.