மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

கோவையில் ஓடும் பேருந்தில் ஓட்டுநா் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பேருந்து மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒா்க்ஷாப் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :23 அக்டோபர் 2026, 12:49 am IST

கோவையில் ஓடும் பேருந்தில் ஓட்டுநா் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பேருந்து மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒா்க்ஷாப் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை குனியமுத்தூா், ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் புதன்கிழமை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநா் மாா்ட்டினுக்கு (54) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்தின் இருக்கையிலேயே உயிரிழந்தாா்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற ஆட்டோ, காா், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநரான நூா்முகமது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுண்ணாம்பு காளவாய், திப்பு சுல்தான் காலனியைச் சோ்ந்த ஒா்க்ஷாப் உரிமையாளா் அப்பாஸ் (46) பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவா் உறவினா் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, கைப்பேசி அழைப்பு வந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த அப்பாஸ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். உயிரிழந்த அப்பாஸுக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.