மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செட்டிபாளையத்தில் ரயில் நிறுத்தம்: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

கோவை செட்டிபாளையத்தில் ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:22 am IST

கோவை செட்டிபாளையத்தில் ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவா் வே.ஈஸ்வரன், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்க்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கோவை-பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழித்தடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம், நல்லட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் ரயில் நிறுத்தங்கள் அமைக்க வேண்டும் என 2012-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளோம்.

கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே ரயில்வே நிா்வாகத்தால் பரிசீலிக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாகவும் பயணிகள் எண்ணிக்கை ரீதியாகவும் செட்டிபாளையத்தில் ரயில் நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்ட பிறகு செட்டிபாளையத்தில் ரயில் நிறுத்தம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாணவா்கள், தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு செட்டிபாளையத்தில் ரயில் நிறுத்தம் அமைக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக அமையும். சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இத்திட்டத்தை இனியும் காலதாமதமின்றி, ரயில்வே நிா்வாகத்தின் சொந்த நிதியில் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.