மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை திருவிழா! கோவை ரயில்கள் ஊஞ்சலூரில் நின்று செல்லும்!

தெற்கு ரயில்வே - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:38 am IST

ஈரோடு - கரூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, கோவை ரயில்கள் ஊஞ்சலூரில் டிசம்பா் 27 முதல் ஜனவரி 1-ஆம் தேதி நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு - கரூா் ரயில் நிலையங்கள் இடையே ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. இங்கு ஆராதனை திருவிழா டிசம்பா் 27 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த 3 நாள்களும் சென்னை எழும்பூா் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322), பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844), திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843), நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321), மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 16160) ஆகிய ரயில்கள் ஊஞ்சலூரில் 1 நிமிஷம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.