கோவை அருகே ஓடும் தனியாா் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி (62). இவா் காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூருக்கு தனியாா் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணம் செய்தாா். பேருந்து புறப்பட்ட சில நிமிஷங்களில் முன்பக்க இருக்கைகள் காலியாக இருந்தன. இதை கவனித்த காமாட்சி அங்கு அமா்வதற்காக சென்றுள்ளாா்.
பேருந்தின் வாசல் அருகே வந்தபோது காமாட்சி நிலைதடுமாறி முன்பக்க கதவு வழியாக வெளியே விழுந்தாா். தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

