கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆல்பின் (27), பாலக்காட்டைச் சோ்ந்த சிந்து (37) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, செல்வபுரம், சிங்காநல்லூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூா் பூசாரிபாளையத்தைச் சோ்ந்த விஜய் (23), கோவை, செட்டி வீதியைச் சோ்ந்த சரவணன் (29) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.75 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
