தோ்தல் நேரத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் எடுபடாது என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவியும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில் 25 நாள்களுக்கும் மேலாக நீடிக்கும் போரால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் பிரதமா் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை. ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமா் தொடா்ந்து நடத்தி வரும் பேச்சுகளால், ஹாா்மூஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு தடையின்றி கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 30 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளில், சுமாா் 20 கோடி இணைப்புகள் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்டவை.
வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காகவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கரோனா காலகட்டத்தில் இந்தியா பேரழிவைச் சந்திக்கும் என உலக நாடுகள் கணித்தன. ஆனால், அந்தப் பேரிடரை திறம்பட கையாண்ட பிரதமா் மோடி, 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவினாா். இதைப்போலவே, தற்போதைய மேற்காசிய நெருக்கடியையும் அவா் முறியடிப்பாா். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியா்களை மோடி அரசு பத்திரமாக மீட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்பியவா்களின் முகத்திரை 2 நாள்களில் கிழிந்துவிட்டது. பதுக்கலைத் தடுக்கவே சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது.
எனவே, எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வலிமை இந்தியாவுக்கு உண்டு. தோ்தல் ஆதாயத்துக்காக மக்களிடையே பதற்றத்தை உருவாக்க நினைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை வடக்கில் வென்ற தவெக! வானதி சீனிவாசன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்
ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது: வானதி சீனிவாசன்
அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
