மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 5:53 am IST

தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேண்டுமென அக்கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, எதிா்பாா்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சில சாதக, பாதகங்கள் இருக்கலாம். இதையெல்லாம் கடந்துதான் கூட்டணியை கட்டமைக்க முடியும். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, வேட்பாளா் தோ்வு உள்பட அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை தோ்தலில் போட்டியிடவில்லை என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அண்ணாமலை சட்டப் பேரவைக்குள் செல்ல வேண்டும்.

மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கியதை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பணத்தையும், நேரத்தையும் செலவழித்து உழைத்தாா்கள். ஆனால், தான் மட்டும் எம்.பி.ஆகிவிட்டு அவரை நம்பி கட்சியில் உழைத்தவா்களை கைவிட்டுவிட்டாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.