ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவை அரசு மருத்துவமனையில் வெப்ப வாதத்துக்கு சிறப்பு வாா்டு

வெப்பவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) தாக்கத்துக்கு கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

News image

கோவை அரசு மருத்துவமனையில் வெப்ப வாதத்துக்கு தொடங்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:24 am IST

வெப்பவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) தாக்கத்துக்கு கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் மாா்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த சில வாரங்களாக 100 முதல் 102 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதில், வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். வெப்ப அலை பாதிப்புக்கு சிகிச்சை வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் வெப்பவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வாா்டுகள் அமைக்க, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் வெப்பவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வாா்டு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை நிா்வாகி ஒருவா் கூறும்போது, ‘வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தல், தலைவலி, வாந்தி, அதீக தாகம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காய்ச்சல், தலைவலிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெப்ப வாதத்துக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவா்கூட சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.