உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொண்டால் வெப்பவாதம் எனப்படும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வராமல் தடுக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, நேரடியாக உச்சி வெயிலில் செல்லாமல் இருப்பதும், உடலைக் குளிா்ச்சியாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என அவா்கள் கூறியுள்ளனா்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று பொது நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்ப நிலை அதைத் தாண்டி அதிகரிக்கும்போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது. இதை ஹைபா்தொ்மியா உச்ச வெப்பநிலை எனக் கூறுகிறோம். அந்தத் தருணத்தில், உடலானது தன்னைத் தானே குளிா்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காதபட்சத்தில் மயக்கம், உணா்விழப்பு, வெப்ப வாதம் ஆகியவை ஏற்படுகின்றன.
அதிகமாக உடல் சூடாகும்போது அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆவியாதல் (எவாப்ரேஷன்) எனும் செயல் முறையை உடல் தன்னிச்சையாக மேற்கொள்கிறது. அதாவது, வியா்வையை அதிகமாக சுரக்கச் செய்து அதன் வாயிலாக உடலின் வெப்பத்தை தணிக்க முயற்சி நடைபெறும். அதன் பின்னா், உடலுக்குள் ஊடுருவியுள்ள வெப்பத்தை நுரையீரலில் இருந்து காா்பன் டை ஆக்ஸைடு வழியே வெளியேற்ற முயலும்.
இந்த இருவேறு செயல்களும் உடலில் உள்ள நீா்ச்சத்து மூலமாகவே நடைபெறுகின்றன. இதன் விளைவாகவே கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. நாக்கு வரண்டு போதல், சிறுநீா் அடா் மஞ்சளாக செல்லுதல், தசைப்பிடிப்பு, தலை சுற்றல், கை கால் தளா்வு உள்ளிட்டவை அதற்கான அறிகுறிகள். அதனைத் தவிா்க்க 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும்.
தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம். நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது உப்புசா்க்கரை கரைசல் அவசியம். அதேவேளையில், செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெப்பவாத பாதிப்பு: உதவி எண்கள் வெளியீடு

காலை, மாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்: ஆட்சியா்
ஹீட் ஸ்ட்ரோக் - உயிருக்கு ஆபத்து! அறிகுறிகள் என்ன?

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
