கோடை வெய்யிலினால் ஏற்படும் வெப்பத் தாக்குதல் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்பின் அறிகுறிகளும் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்...
கோடை வெப்பம் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கோடை காலத்தில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பத் தாக்குதல்(ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்பு வர வாய்ப்பு அதிகமுள்ளது.
மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும் (36.1 - 37.8°C). சுற்றுப்புற வெப்ப நிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் போது உடலில் வியர்வை வெளியேறுவது மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதன் மூலமாக அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.
இந்த கோடை வெய்யிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. நீர்ச்சத்து இருக்கும்பட்சத்தில் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை.
அறிகுறிகள்
நீர்ச்சத்து இல்லாதபோது அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம் - அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், மயக்கம், வலிப்பு, தோல் வறண்டு சூடாக சிவந்து காணப்படுதல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
பொது இடங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவரை நிழல் பகுதியில் காற்றோட்டமான இடத்தில் அமர்த்தி தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும். ஈரத்துணி கொண்டு உடலைத் துடைக்கலாம்.
பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
வெப்ப இழப்பைத் தவிர்க்க தினமும் 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும்.
தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.
நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது ஓஆர்எஸ் உப்புச் சா்க்கரை கரைசல் பருக வேண்டும்.
காபி, டீ மற்றும் செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும்.
பகல் 11 - 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர், குடை, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்களில் ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
இலகுவான தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
முடிந்தவரை காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும்.
Summary
Heat stroke: Symptoms and prevention
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்... என்ன சாப்பிட வேண்டும்?
உலகிலேயே அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் 14 இந்திய நகரங்கள்!

ஹீட் ஸ்ட்ரோக்: உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க அறிவுறுத்தல்
ஹீட் ஸ்ட்ரோக் - உயிருக்கு ஆபத்து! அறிகுறிகள் என்ன?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

