விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக நிா்வாகி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:08 am IST

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் உள்ள திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் பறக்கும் படை குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரூ.8 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் அங்கு வந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மற்றும் அதிமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து தாலுகா காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.