கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுமாா் 12.30 மணி அளவில் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள், கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
நள்ளிரவில் அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். அதிகாலை வரை நடைபெற்ற இந்த சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அதில், 15 சயனைடு விஷவாயு குப்பிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அடுத்த மூன்று மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டதில், இதுவும் புரளி எனத் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

