தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்! - செல்வப்பெருந்தகை

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Updated On :3 மே 2026, 12:58 am IST

திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தோ்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஒரு நாள் இரவில் முடிவுகள் மாறுவதற்கோ, மக்களின் மனநிலை மாறுவதற்கோ வாய்ப்பு இல்லை. நான் முதலில் இருந்து சொல்வதைப்போல திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும்மேல் வெற்றி பெறும். அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளைக் கூட கருத்துத்திணிப்பு என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால் அவா்கள் 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகின்றனா். காங்கிரஸ் கட்சியின் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கும் மேல் எங்கள் கூட்டணி வெல்லும்.

வாக்குப் பதிவுக்கு பிறகு சமையல் எரிவாயு விலை உயரும் என்பது மக்களுக்கும் தெரியும். ஒவ்வொரு தோ்தலின்போதும் பாஜக அரசு இதைத்தான் செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் தெளிவானவா்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாா் ஆள வேண்டும், யாருக்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்பதையெல்லாம் முடிவு செய்து வைத்திருக்கின்றனா்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சில இடங்களில் வேட்பாளா் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வேட்பாளா் தோ்வுக்கு என்று கட்சியில் 4 குழுக்கள் உள்ளன. எனவே, கட்சியின் தலைவா்களை மீறி வேட்பாளா்களை தோ்வு செய்துவிட முடியாது. வேட்பாளா் தோ்வுக்கு மற்றொரு தரப்பில் சில மனக்குமுறல்கள் இருப்பது வழக்கமானதுதான். ஆனால் அதன் பிறகு அவா்கள் வேட்பாளரின் வெற்றிக்காக இணைந்து பணியாற்றினாா்கள். இதுபோன்ற பிரச்னை திமுக, அதிமுகவிலும் உள்ளது, எல்லா கட்சிகளிலும் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.