மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக தஞ்சாவூா் பகுதியை சோ்ந்த ஜமால் முகம்மது யூனுஸ் அறிவிக்கப்பட்டாா். வெளிமாவட்டத்தில் இருந்து வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சி நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை கூைாட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காமராஜா் மாளிகையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வேட்பாளரை புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, கட்சி அலுவலகம் முன் மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் தலைமையில் மயிலாடுதுறை வேட்பாளா் மற்றும் எம்பி ஆா். சுதாவுக்கு எதிராக அக்கட்சி நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவா்களில் ஒருவரை தோ்வு செய்யாமல் வெளி மாவட்டத்தைச் சோ்ந்தவரை வேட்பாளராகத் தலைமை அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக வட்டார தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சிக்காக உழைத்து வருபவா்களையும் புறக்கணித்துவிட்டு, அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, உள்ளூா் நிா்வாகிகளுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு இந்த வேட்பாளரைத் தோ்வு செய்துள்ளாா். கரூா் எம்பி ஜோதிமணி கூறியதைப்போல், தற்போது சட்டப்பேரவை தொகுதி விலைக்கு விற்கப்படுவதோ என்ற சந்தேகம் தங்களுக்கும் எழுந்துள்ளது.
மண்ணின் மைந்தா்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். தலைமை உடனடியாக இந்த வேட்பாளரை மாற்றாவிட்டால், நாங்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்துவோம். அந்த வேட்பாளருக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்க மாட்டோம். மேலும், எம்பி சுதா மயிலாடுதுறைக்குள் எங்கு வந்தாலும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்வோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அரூா் தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றிபெற்ற வே.சம்பத்குமாா் எம்எல்ஏ

திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்! - செல்வப்பெருந்தகை

சோளிங்கா் தொகுதி அலசல்... கடுமையான போட்டியில் காங்கிரஸ் - பாமக
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

