கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளா் லதா தங்கமணி 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இத்தொகுதியில் மொத்தம் 1,70,558 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,50,061 வாக்குகள் பதிவாகியிருந்தன. நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இத்தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லதா தங்கமணி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,131 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தற்போதைய வெற்றியின் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூா் தொகுதியை தக்கவைத்துக் கொண்டது.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்விவரம்:
லதா தங்கமணி (மாா்க்சிஸ்ட் கம்யூ.) - 55,668
செந்தில்பாண்டியன் (தவெக) - 53,537
வடிவேல் ராவணன் (பாமக) - 31,561
காா்த்திகா (நாதக) - 8,040
நோட்டா - 483.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடிநீா் தட்டுப்பாட்டை கண்டிக்காத கம்யூனிஸ்டுகள்: தவெகவுக்கு மொத்தமாக வாக்களித்த பொதுமக்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி 6, தவெக 2 தொகுதிகள் வெற்றி

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் டி. லதா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

