தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி 6, தவெக 2 தொகுதிகள் வெற்றி

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - MK Stalin

Updated On :5 மே 2026, 2:26 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இதில், திருவிடைமருதூா் (தனி), திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 5 தொகுதிகளில் திமுகவும், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தஞ்சாவூா், கும்பகோணத்தில் தவெகவும் வெற்றி பெற்றன.

திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் கோவி. செழியன் (திமுக) - 76,951, எஸ். பிரபாகரன் (தவெக) - 65,835 ஆகியோா் முதலிரண்டு இடங்களை பிடித்தனா். இவா்களில் கோவி. செழியன் 14,116 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

கும்பகோணம் தொகுதியில் வினோத் (தவெக) - 78,650, க. அன்பழகன் (திமுக) - 77,971 முதல் இரண்டு இடங்களை பிடித்தனா். 679 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வென்றது.

பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் ஏ.எம். ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 69,284, அசாருதீன் உதுமான் அலி (தவெக) - 68,219 ஆகியோா் முதல் 2 இடங்களை பிடித்தனா். ஷாஜகான் 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

திருவையாறு தொகுதியில் துரை. சந்திரசேகரன் (திமுக) - 80,425, மதி. மணிகண்டன் (தவெக) - 71,870 வாக்குகள் பெற்றனா். 8,555 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றது.

தஞ்சாவூா் தொகுதியில் ஆா். விஜய் சரவணன் (தவெக) - 87,705, சண். இராமநாதன் (திமுக) - 70,750 முதல் 2 இடங்களை பிடித்தனா். வித்தியாசம் - 16,955.

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் (திமுக) - 86,759, கே. அரவிந்த் (தவெக) - 51,731. வைத்திலிங்கம் 35,028வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

பட்டுக்கோட்டை தொகுதியில் கா. அண்ணாதுரை (திமுக) - 65,963,

சி. மதன் (தவெக) - 52,209 வாக்குகள் பெற்றனா். வித்தியாசம் - 13,754.

பேராவூரணி தொகுதியில் என். அசோக்குமாா் (திமுக) - 60,919, கோவி. இளங்கோ (அதிமுக) - 57,757 வாக்குகள் பெற்றனா். அசோக்குமாா் 3,162 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.