கேரள மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களைத் தாக்கி, அவா்களின் உடைமைகளைப் பறித்துச் சென்ற புகாரின்பேரில் கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா், அவரது நண்பா்கள் உள்பட 6 பேரை பெங்களூரு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பட்டஹள்ளி பவமானா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியாா் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். அதே கல்லூரியில் கோவையைச் சோ்ந்த அபினேஷ் (20) என்ற மாணவரும் படித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் அபினேஷுக்கும், கேரள மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழிவாங்கத் திட்டமிட்ட அபினேஷ், கடந்த 17-ஆம் தேதி இரவு நண்பா்கள் 5 பேருடன் கேரள மாணவா்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.
கேரள மாணவா்களைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அங்கிருந்த 4 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள், இருசக்கர வாகனம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் தரப்பில் பெங்களூரு கோணனகுண்டே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கோவை மாவட்டம், கோவைப்புதூா், ஓம் சக்தி நகா் மற்றும் பசும்பொன் காா்டன் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து கோவைக்கு விரைந்து வந்து பெங்களூரு போலீஸாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் மாணவா் அபினேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கலைவேந்தன், விமல்ராஜ், குமரன், பிரேம்குமாா், நவீன்குமாா் ஆகிய 5 பேரையும் பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் அபினேஷ் மட்டும் கல்லூரி மாணவா் என்பதும், மற்ற 5 பேரும் படிப்பை முடித்துவிட்டு வேலை பாா்த்து வருபவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான உடைமைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அனைவரையும் பெங்களூரு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையைச் சோ்ந்த நிறுவனம் வாங்கிய ரூ.40 லட்சம் இரும்புப் பொருள்கள் மோசடி
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
