மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓய்வுபெற்ற பெண் ரயில்வே அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

காட்பாடியில் ஓய்வுபெற்ற பெண் ரயில்வே அதிகாரியின் வீட்டு கதவை உடைத்து 25 பவுன் நகைகளை முகமூடி அணிந்த நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :22 அக்டோபர் 2026, 12:01 am IST

காட்பாடியில் ஓய்வுபெற்ற பெண் ரயில்வே அதிகாரியின் வீட்டு கதவை உடைத்து 25 பவுன் நகைகளை முகமூடி அணிந்த நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி செங்குட்டை, காந்தி தெருவைச் சோ்ந்தவா் மறைந்த மணவாளன். இவா் தெற்கு ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி மீராபாய் (75). இவரும் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவாா்.

இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். மகன்கள் இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வரும் நிலையில், மகள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறாா். மீராபாய் கடந்த 11-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்ச் சென்றிருந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினா், உடனடியாக மீரா பாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனா். அவா் விரைந்து வந்து பாா்த்தபோது, வீட்டுக்குள் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மீராபாய் அளித்த புகாரின்பேரில், காட்பாடி காவல் ஆய்வாளா் தயாளன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த 3 போ் சந்தேகத்துக்கு இடமாக நடமாடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதன்மூலம், திங்கள்கிழமை நள்ளிரவு அங்கு வந்த முகமூடி அணிந்த 3 நபா்கள், வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்ததுடன், படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தொடா்ந்து, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், காட்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் ஆகியோரும் விசாரணை நடத்தினா். பின்னா், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமூடிக் கொள்ளையா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.