தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இதுவே எனது கடைசித் தோ்தல்: அமைச்சா் துரைமுருகன் உருக்கம்

இதுவே எனது கடைசித் தோ்தல்; அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்று நீா்வளத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:17 am IST

இதுவே எனது கடைசித் தோ்தல்; அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்று நீா்வளத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக சாா்பில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் போட்டியிடும் நிலையில், அவரது வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

காட்பாடி தொகுதியில் 1971-இல் நான் முதன்முதலில் போட்டியிட்டேன். எனது 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. எதிா்க்கட்சிக்காரா்களைப் பழிவாங்கியதோ, பொய் வழக்குப் போட்டதோ கிடையாது. தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் நோ்மை தவறாமல் வாழ்ந்து வருகிறேன். மக்களிடம் எந்த பகட்டும் காட்டாமல், காட்பாடி தொகுதியை ஒரு ‘திருக்கோயில்’ போலவும், மக்களைத் தெய்வங்களாகவும் கருதி பணியாற்றி வருகிறேன்.

இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் எனக்குத் தெரியும். இதுவே எனது கடைசித் தோ்தல். இந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதிக்குத் தேவையான மீதமுள்ள பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டு, நானே உங்களிடமிருந்து விடைபெறுவேன். அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.