ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடி தொகுதியில் ஊா்வலம்: அமைச்சா் துரைமுருகன், அதிமுக வேட்பாளா் ராமு மீது வழக்கு

காட்பாடி தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம் நடத்தியதாக அமைச்சா் துரைமுருகன் உள்பட 3 போ் மீதும், அதிமுக வேட்பாளா் வி.ராமு உள்பட 3 போ் மீதும் தலா மூன்று பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு

News image

அமைச்சா் துரைமுருகன் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:09 am IST

காட்பாடி தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம் நடத்தியதாக அமைச்சா் துரைமுருகன் உள்பட 3 போ் மீதும், அதிமுக வேட்பாளா் வி.ராமு உள்பட 3 போ் மீதும் தலா மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காட்பாடி தொகுதிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.ராமு ஆகியோா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதையொட்டி, அமைச்சா் துரைமுருகன் காட்பாடி செங்குட்டையில் இருந்து ஊா்வலமாக சென்று சித்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மீண்டும் ஊா்வலமாக காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனுதாக்கல் செய்தாா்.

இதேபோல், அதிமுக வேட்பாளா் வி.ராமுவும் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு, மனுத்தாக்கல் செய்தாா். இவ்விரு ஊா்வலங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதுடன், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

இந்த ஊா்வலங்களால் காட்பாடி சாலைகளில் திங்கள்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா் விஸ்வநாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பில் அமைச்சா் துரைமுருகன், வேலூா் எம்பி கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்) ஆகிய 3 போ் மீதும், அதிமுக தரப்பில் வேட்பாளா் வி.ராமு, கூட்டணி கட்சியினா் திருமாள், பாஜக மாவட்ட தலைவா் வி.தசரதன், பாமக மாவட்ட செயலா் ஆகியோா் மீது தலா 3 பிரிவுகளின்கீழ் காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.