காட்பாடி தொகுதியில் நான் செய்துள்ள பணிகள் மக்களுக்கு தெரியும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளாா். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவா் திங்கள்கிழமை சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடிக்கு வந்தாா்.
அங்கு திரண்டிருந்த கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அமைச்சா் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். பின்னா், திறந்த வாகனத்தில் பேரணியாக சென்ற அவா், அண்ணா, பெரியாா், காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் துரைமுருகன் மக்களிடையே பேசியது: காட்பாடி தொகுதியில் வாழும் தெய்வங்களுக்கு (மக்கள்) எனது பணிவான வணக்கங்கள். என்னை மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவருக்கும், அன்புடன் வரவேற்ற தொகுதி மக்களுக்கும் நன்றி. உங்கள் உற்சாகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை என்னை ஆதரித்த மக்கள், இம்முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
பின்னா், துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது - காட்பாடி தொகுதிக்கான திட்டங்கள் உள்பட எல்லா திட்டங்களும் தோ்தல் அறிக்கையில் வெளியிடப்படும். திமுக தோ்தல் அறிக்கையை தவெக தலைவா் விஜய் விமா்சித்திருப்பதாக கூறுகிறீா்கள். அவா் குறித்து நான் பெரிதாக கருத்து கூற விரும்பவில்லை.
நான்கு முனைப் போட்டி அல்ல, எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக வெற்றி பெறும். காட்பாடி தொகுதியில் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்ற எதிா்க்கட்சிகள் கூறுவதாக கேட்கிறீா்கள். நான் செய்த பணிகள் அனைத்தும் மக்களுக்கு நன்றாக தெரியும் என்றாா்.
அப்போது, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், துணை மேயா் எம்.சுனில்குமாா், காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

இதுவே எனது கடைசித் தோ்தல்: அமைச்சா் துரைமுருகன் உருக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

