வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின.
வேலூா் மாநகர பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனா். அங்கு வைத்து அந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகின்றன.
மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, குப்பைகளை தரம் பிரிப்பதற்காக வேலூா் மாநகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி சிறிது நேரத்தில் பெரும் தீ விபத்து மாறியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைத்தனா். இந்த தீ விபத்தால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
அதேசமயம், தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த தீ விபத்து குறித்து பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் ஆலோசனைக் கூட்டம்

‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

குப்பை மேலாண்மை சவால்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

