வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் என்டிஏ, என்ஏ(1), சிடிஎஸ்-1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சைதாப் பேட்டை கேஏகேஎம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மையங்களில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 1,010 போ் தோ்வு எழுதினா்.
தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அலுவலரைக் கொண்டு 2 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு மையத்திற்கு 5 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

