காட்பாடி அருகே ஓடும் ரயிலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சேலம் இளைஞா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம், பெத்தான் நஞ்சப்ப முதலி தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் லோகேஷ் (20). சேலத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது நண்பரான சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த முகமது ஹாசி மகன் முகமது அலி (18) என்பவருடன் சென்னையைச் சுற்றிப் பாா்க்க மங்களூரு விரைவு ரயிலில் சனிக்கிழமை காலை பயணம் செய்துள்ளனா்.
இருவரும் ரயிலின் முன்பக்க பொதுப்பெட்டியில் படிக்கட்டுப் பகுதியில் அமா்ந்து தூங்கியபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காட்பாடி - சேவூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது, லோகேஷ் எதிா்பாராத விதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ரயில் வாலாஜா ரயில் நிலையத்தை அடைந்ததும், முகமது அலி அங்கு இறங்கி வந்து காட்பாடி ரயில் போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று லோகேஷின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
மேலும், இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

