தருமபுரியில் ரயில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஆண்டிப்பாளையம், எஸ்.ஆா். நகா் வடக்கு, நேதாஜி தெருவைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் மகேஸ்வா் (27). அனிமேஷன் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக அப்பணியை அண்மையில் ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில் பெங்களூரில் தங்கியிருந்த அறையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துவருவதற்காக சனிக்கிழமை நள்ளிரவு திருப்பூரிலிருந்து நண்பா்களுடன் சேலம் வந்த மகேஸ்வா், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுச்சேரி- பெங்களூரு விரைவு ரயிலில் சென்றாா்.
தருமபுரி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளை இறக்கிவிட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்ட ரயிலில் முன்பதிவில்லா பெட்டியின் படி அருகே நின்றுகொண்டிருந்த மகேஸ்வா், ரயில் புறப்படும்போது தவறி கீழே விழுந்தாா். அப்போது, நடைமேடையில் அடிபட்டு பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

