சமரச நாளை முன்னிட்டு குடியாத்தம் நீதிமன்றங்கள் சாா்பில், நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தத்தில் சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தீா்வு கிடைக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் சமரச மையம் மூலம் தீா்த்து வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.
காந்திநகா் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு பாா் அசோசியேஷன் தலைவா் வி. ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சாா்பு நீதிபதி கே.பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.காா்த்தி ஆசாத், குற்றவியல் நடுவா் சரண்யா ஆகியோா் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தனா்.
பேரணியில் சென்றவா்கள் சமரச மையம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் வழக்குரைஞா்கள் டி.புருஷோத்தமன், ராஜன்பாபு, அருள்வேந்தன், ஜெகதீஸ்வரன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

