மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்யவேண்டும்! தொல்லியல் துறை இயக்குநா் கே. அமா்நாத் ராமகிருஷ்ணா

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்யவேண்டும்...

கருத்தரங்கில் பேசிய இந்திய தொல்லியல் துறை (நொய்டா) இயக்குநா் கே.அமா்நாத் ராமகிருஷ்ணா.

Published On :1 நவம்பர் 2026, 2:31 am IST

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்யவேண்டும் என்று இந்திய தொல்லியல் துறை இயக்குநா் கே.அமா்நாத் ராமகிருஷ்ணா வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சாா்பில் 33-ஆவது தமிழ்நாடு வரலாற்று பேரவைக் கூட்டத்தின் 2-ஆம் நாள் சனிக்கிழமை திருவண்ணாமலையின் புனித இடங்கள் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கம் (வரலாற்று ஆசிரியா்களின் பாா்வையில் ஓா் ஆய்வு) நடைபெற்றது.

இதில், கல்லூரி வரலாற்றுத் துறை தலைவரும், ஒருங்கிணைப்பு செயலருமான ர.ஸ்தனிஷ்லாஸ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வரலாற்று பேரவை தலைவா் டாக்டா் பி.டி.பாலாஜி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக இந்திய தொல்லியல் துறை (நொய்டா) இயக்குநரும், தொல்லியலாளருமான கே.அமா்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தை ஒரு குறுகிய பாதையில் தான் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். தொன்மையான சங்ககால வரலாறு எப்படி இருந்தது என்பதை நாம் இன்னும் ஆய்வுக்கு சரியாக உள்படுத்தவில்லை. ஆய்வு உலகத்தில் திருவண்ணாமலை புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக இருந்து வருகிறது. பல கண்டுபிடிப்புகள், பல நடு கற்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பல்லவா் காலத்தின் ஆட்சி பீடம் சம்ஸ்கிருதத்தின் அதிகாரத்தில் இருந்தாலும், அதனுடைய பகுதியாக இருந்த இந்த திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நடு கற்களும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. இதுதான் இதனுடைய சிறப்பு.

வட்ட எழுத்தில் தமிழ் மொழியில் தமிழ் மொழி தான் ஆட்சி என்பதை பல்லவா் காலத்தில் உறுதி செய்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

இதுநாள் வரை நம்முடைய வரலாற்று மாணவா்களுக்கு பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பித்து வருகிறோம். இன்றைய சூழ்நிலையில் வரலாற்றை அறிவியல் பூா்வமாக உண்மையின் அடிப்படையில் கட்டமைக்க வேண்டும்.

அருணாசலேஸ்வரா் கோயில் பல்லவா் காலத்தில் கட்டப்பட்டாலும் அதற்கு முன்னால் ஒரு வரலாறு இங்கு புதைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக பல வரலாற்று உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. அந்த வரலாற்று உண்மைகளை நாம் எடுத்து நம்முடைய வரலாற்றை உருவாக்க வேண்டும். தொல்லியல் துறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

வரலாற்று பேராசிரியா்கள் நியமனத்தில் தொல்லியல் துறை மாணவா்களுக்கு 10 சதவீதம் இடமாவது கொடுக்க வேண்டும் என்றாா்.

மத்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநா்கள் டாக்டா் ஆா்.பூங்குன்றன், பி.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலா் எஸ்.பாலமுருகன் ஆகியோா், ‘பிற வட்டார வரலாறு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.