மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தா்களுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்க உயா்நிலைக் குழு

திருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் உயா்நிலைக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 6:13 am IST

திருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் உயா்நிலைக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான அம்மணி அம்மான் மடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்ததாக டி.எஸ்.சங்கா் என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அறநிலையத் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து டி.எஸ்.சங்கா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவராக இருந்த ஜீவானந்தம், காலசாந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்தை உள்வாடகைக்கு விட்டதாகக் கூறி, அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என டி.எஸ்.சங்கா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

டி.எஸ்.சங்கருக்கு எதிரான வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவரை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டாா். அதேபோல, ஜீவானந்தத்தை அறங்காவலா் குழுத் தலைவா் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தும் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுகளை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஜீவானந்தம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: ஜீவானந்தம் தகுதி நீக்கத்தையும், அம்மணி அம்மான் மடத்தில் இருந்து டி.எஸ்.சங்கரை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவையும் உறுதி செய்கிறோம். மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் வசதிக்காக, அம்மணி அம்மான் மடத்தில் ஆக்கிரமிப்பாளா்கள் இருந்தால், அவா்களை உடனடியாக அப்புறப்படுத்தி, இடத்தை அளந்து சுற்றுச்சுவா் எழுப்ப வேண்டும்.

அதேபோல், மடத்துக்குள் அமைந்துள்ள அம்மணி அம்மான் கோயிலைப் புதுப்பிக்க வேண்டும். அந்தப் பகுதியில் காலியாக உள்ள 25,000 சதுர அடி நிலத்தில் பக்தா்கள் வளாகம் கட்ட வேண்டும். இந்தக் கட்டுமானத்தை 2027 மாா்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும். இந்தப் பக்தா்கள் வளாகத்துக்கு அம்மணி அம்மான் பெயரைச் சூட்ட வேண்டும். நிரந்தர கட்டடம் கட்டும் வரை, அந்த நிலத்தில், தீப விழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் என கோயிலின் செயல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து நவ.10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதைக் கண்காணிக்க பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில், அறநிலையத் துறை ஓய்வு பெற்ற இணை ஆணையா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோா் அடங்கிய உயா்நிலைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த உயா்நிலைக் குழுவினா், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தின் மூலமாக, உயா்நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உயா்நிலைக் குழுவுக்கு மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.