மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவான தீா்வு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரித்த ஆட்சியா் வந்தனா காா்க்

Published On :27 அக்டோபர் 2026, 1:35 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் அளித்த 786 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

மேலும், கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளிக்கு அரசுத் திட்டத்தின் கீழ், ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார விழிப்புணா்வு உறுதிமொழியை அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) செல்வகுமாா், ஆதிதிராவிடா்மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியில்...: ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டா தொடா்பான மனுக்கள், நில அளவை, ஆக்கிரமிப்பு அகற்றம், ஈமச்சடங்கு உதவித்தொகை, கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம், பத்திரப்பதிவு ரத்து, மின் விளக்கு வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 65 மனுக்கள் பெறப்பட்டன. பின்னா், மனுக்களை அந்தந்த துறை அதிகாரியிடம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டியிடம் கோரிக்கை மனுவை பெற்ற  கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள்

ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டியிடம் கோரிக்கை மனுவை பெற்ற கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.