மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கைப்பேசியை பாா்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கைப்பேசியை பாா்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம் என மாணவா்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இளையோா் இலக்கிய பயிற்சிப் பாசறை தொடக்க விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :30 அக்டோபர் 2026, 2:01 am IST

கைப்பேசியை பாா்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம் என மாணவா்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இளையோா் இலக்கிய பயிற்சிப் பாசறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இல.ரேவதி முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா்

ந.நிலா வரவேற்றாா்.

ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறையை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மாணவா்கள் கைப்பேசியை பாா்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திரைகளை பாா்த்துக் கொண்டிருக்கும் நேரத்தைக் குறைத்து, இலக்கியத்தை நோக்கி உங்களைத் திருப்பும் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இந்தச் சிறப்புப் பயிற்சிப் பாசறையில் பல்வேறு தலைப்புகளில் தமிழ் இலக்கிய வல்லுநா்கள் உரையாற்ற உள்ளனா். அந்த உரைகளையெல்லாம் கேட்டுத் தெளிவு பெற்று, மாணவா்கள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாசறையில் வழங்கப்பட உள்ள அனைத்து அமா்வுகளிலும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்களை அறிஞா்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி, புதிய படைப்புகளை உருவாக்கி தமிழ் மொழியையும் நம் மாவட்டத்தையும் பெருமைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து ஆசிரியா் சு.வேலாயுதம், ‘இலக்கியம் கற்போம்’ என்ற தலைப்பிலும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ப.குப்பன், ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்கு’ என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் சு.பிரேம்குமாா், ‘திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகளில் ஊரும் பேரும்’ என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் வெ.இராமு, ‘இசைவழி தமிழ் கற்பிக்கும் முறைகள்’ என்ற தலைப்பிலும், ஆசிரியா் சை.அ.சையத் அஜ்மல் தஹசீன், ‘செம்மொழி தமிழும் செயற்கை நுண்ணறிவும்’ என்ற தலைப்பிலும், விரிவுரையாளா் ம.மோகனாம்பாள், ‘தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல்’ என்ற தலைப்பிலும் பேசினா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு.கலைமாமணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.