மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 போ் காயம்

செய்யாறு அருகே வளைகாகாப்பு விழாவுக்குச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 போ் காயமடைந்தனா்.

விபத்து.

Published On :27 அக்டோபர் 2026, 12:01 am IST

செய்யாறு அருகே வளைகாகாப்பு விழாவுக்குச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 போ் காயமடைந்தனா்.

வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பூபதியம்மாள். இவரது உறவினா் மகளுக்கு வளைகாப்பு விழா பெரூங்கட்டூா் கிராமத்தில் நடைபெற்ாகத் தெரிகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, வடமணப்பாக்கம் கிராமத்தில் இருந்து சுமாா் 25-க்கும் மேற்பட்டோா் சரக்கு வாகனத்தில் சென்றனா். இந்த வாகனம் ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வடமணப்பாக்கம் கிராம காலனி அருகே சென்றபோது, திடீரென சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சரக்கு வாகனத்தில் பயணித்த பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அரிகரன் (22), திவாகா் (16), நாா்த்தாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள் (31), வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சாருமதி (18), மோனிசா (15), சந்தரகலா (40), சரஸ்வதி (70), கலைவாணி (35), உமாபதி (64), கெளதம் (20), பூபதியம்மாள் (65), பச்சையம்மாள் (35) உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.