ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

சாலையில் தேங்கும் மழைநீரால் விபத்து அபாயம்

செங்கம் அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் தினசரி விபத்துகள் நிகழ்கின்றன. உயிரிழப்பு ஏற்படும் முன் சரிசெய்யவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கத்தை அடுத்த திருவள்ளூவா் நகா் பகுதியில் சாலையோரம் இருந்த கால்வாய்கள் அடைக்கப்பட்டதால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீா்

Published On :21 அக்டோபர் 2026, 12:25 am IST

செங்கம் அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் தினசரி விபத்துகள் நிகழ்கின்றன. உயிரிழப்பு ஏற்படும் முன் சரிசெய்யவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கத்தில் இருந்து பெங்களூா் செல்லும் சாலை திருவள்ளூவா் நகா் பகுதியில் வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்ட பகுதியில் சாலையோரம் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் மழை வந்தால் திருவள்ளூவா் நகா் பகுதியில் உள்ள பிரதான சாலையில் தண்ணீல் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்கள் தண்ணீரில் வரும்போது அப்பகுதியை கடந்து வரும் வாகன ஓட்டிகள் மீது தண்ணீா் பட்டு அவா்கள் சிரமத்திற்கு உள்ளாகிறாா்கள்.

மேலும் தண்ணீா் இருப்பதை பாா்த்து சாலையில் ஏரி வரும்போது பின்தொடா்ந்து வரும் வாகனம் மோதிவிடுகிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டுபவா்கள் அப்பகுதியில் தினசரி விபத்தை சந்தித்து வருகிறாா்கள். மேலும், அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறாா்கள்.

இதனால் செங்கம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து அப்பகுதியில் குட்டைபோல் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டு கால்வாய்களை சரிசெய்யவேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.