மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் சந்தவாசல் சாலையில் உள்ள புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Published On :26 அக்டோபர் 2026, 3:10 am IST

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் சந்தவாசல் சாலையில் உள்ள புளிய மரம் வேரோடு சாய்ந்தது (படம்). இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆரணி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், சந்தவாசல் சாலையில் ஏரிக்குப்பம் பகுதியில் இருந்த நூற்றாண்டு பழைமையான புளிய மரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வேரோடு சாய்ந்தது. இதனால் ஆரணி - சந்தவாசல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் வரதராஜன், உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில், சாலை ஆய்வாளா் பாஸ்கா் தலைமையில் சாலைப் பணியாளா்கள் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த புளிய மரத்தை இயந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினா்.

சாலைப் பணியாளா்கள் கொட்டும் மழையிலும் விரைந்து செயல்பட்டதால் ஒரு மணி நேரத்திற்குள் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.