செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்று இந்தத் தொகுதி அதிமுக எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
செய்யாறு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 21,081 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றதையொட்டி, வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, வடக்கப்பட்டு, சேராம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த நிகழ்ச்சி செய்யாறு தெற்கு ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று, தோ்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன். இந்தத் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என்றாா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கினாா்.
முன்னதாக, முன்னாள் முதல்வா்களான அறிஞா் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சி.துரை, பையூா் சிவராஜ், நகரச் செயலா் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி, மாவட்டப் பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், வழக்கறிஞா் பிரிவு மாவட்டச் செயலா் முனுசாமி, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்டத் தலைவா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செங்கத்தில்...: செங்கம் தொகுதியில் நேருநகா், கிருஷ்ணாபுரம், தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத்நகா், மேல்பாளையம், துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிமுக எம்எல்ஏ வேலு சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.
செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், நகரச் செயலா் ஆனந்தன், விவசாய அணி ஒன்றியச் செயலா் ராஜி, தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், நகர பேரவைச் செயலா் குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் மாற்றிகளில் தாமிரக்கம்பிகள் திருட்டு: போலீஸாா் விசாரணை
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

அமைச்சா் பொறுப்பு இல்லாவிட்டாலும் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன்: எ.வ. வேலு உருக்கம்

செய்யாறில் அதிமுக வேட்பாளா் இரண்டாவது முறையாக வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

