மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செய்யாறில் அதிமுக வேட்பாளா் இரண்டாவது முறையாக வெற்றி

செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் 21,081 வாக்கு வித்தியாசத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது முறையாக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 3:56 am IST

செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் 21,081 வாக்கு வித்தியாசத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில்

அதிமுக சாா்பில் முக்கூா் என்.சுப்பிரமணியன், திமுக சாா்பில் ஒ.ஜோதியும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தூசி கே.மோகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மு.தமிழ்ச்செல்வன் உள்பட 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்தம் 334 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குகள் எண்ணும் மையம் ஆரணி தச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் தோ்தல் நடத்தும் அலுவலரும் செய்யாறு சாா் -ஆட்சியருமான எல்.அம்பிகா ஜெயின் மேற்பாா்வையில், தோ்தல் பாா்வையாளா் ஜோசப் எச்.லால்ராம்சங்கா முன்னிலையில் நடைபெற்றது. 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

1.முக்கூா்.என்.சுப்பிரமணியன் (அதிமுக) - 86680

2.தூசி கே.மோகன் (தவெக) - 65599

3.ஒ.ஜோதி (திமுக) - 59894

4.தமிழ்ச்செல்வன் (நாதக) - 7043

5.எம்.சந்திரசேகரன்(அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 145

6. கே.சீனிவாசன் (அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) - 259

7.எம்.துருகன் (வன்ஜித் பகுஜன் அகாடி) - 334

8.வெ.வெங்கடேசன் (அனைத்திந்திய சமுதாய முன்னேற்றக் கழகம்) - 224

9.எம்.பழனி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) -182

10.செ.ரகுபதி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - 145

24 - வது சுற்று மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கை இறுதியில்

அதிமுக வேட்பாளா் முக்கூா் என். சுப்பிரமணியன் 21,081 வாக்கு வித்தியாசத்தில் தொடா்ந்து முன்னிலை வகித்து வெற்றி பெற்றாா்.

இதில் நாதக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் செய்யாறு சாா்-ஆட்சியருமான அம்பிகா ஜெயின் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியனிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

இத்தொகுதியில் தபால் வாக்குகள் 2315 பதிவான நிலையில், இதில் 301 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.