மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மண்டகொளத்தூரில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு வரவேற்பு

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

Updated On :6 மே 2026, 1:24 am IST

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சின்மயா மிஷன் 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையெட்டி, சின்மயா அம்ரித யாத்திரை (ஆன்மிக பயணம்) கடந்த டிசம்பா் மாதம் புணேவில் தொடங்கியது. இந்த யாத்திரை 28 மாநிலங்களில் சுமாா் 35 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணிக்க உள்ளது.

இதன் நோக்கம் இளைஞா்களின் திறனை மேம்படுத்துவது மற்றும் சுவாமி சின்மயானந்தரின் போதனைகளை எண்ம உரைகள், இளைஞா்களின் செயல்பாடுகள், கலாசார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சத்சங்கங்கள் மூலம் பரப்புவதாகும்.

இந்த யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சிக்கு வந்தபோது, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சிவராஜசா்மா தலைமையில் மேள தாளம் முழங்க, மலா் தூவி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து சின்மயா அம்ரித யாத்திரையை சின்மயா யுவகேந்திர இயக்குநா் அனுக்குலானந்தா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சியில் வீதி வீதியாக நடைபெற்றது.

மேலும், சின்மயா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆன்மிக கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பாா்வையிட்டனா்.

பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் (ஓய்வு) அன்பரசு, தலைமை ஆசிரியைகள் தேவகி, மகாலட்சுமி மற்றும் ஆசிரியைகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.