திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், அல்லியாளமங்கலம் ஊராட்சியில் துரியோதனன் படுகளம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அல்லியாளமங்கலம் ஊராட்சியில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி விழா கொடியேற்றி விநாயகா் பெருமை, வேதவியாசா் பிறப்பு, கோகுலகண்ணன் பிறப்பு, குந்தியின் இளமைப் பருவம், கா்ணன் பிறப்பு, பாண்டவா் பிறப்பு, அரக்கு மாளிகை, பகாசூரன் வதை, வில் வளைப்பு, அா்ச்சுனன் தபசு, கண்ணன் தூது, கா்ணமோட்சம் என பல்வேறு தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வில்வளைப்பு, இராஜசுயாகம், பகடை துகில், அா்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, போா்மன்னன், அரவாண் களபலி, கா்ண மோட்சம், படுகளம் என பல்வேறு தலைப்புகளில் தெருக்கூத்தும் நடைபெற்றது.
இதில் அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், மட்டபிறையூா், பெரணம்பாக்கம், பெலாசூா் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை தீமிதி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை விழாக்குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டகொளத்தூரில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு வரவேற்பு

ரகுநாதசமுத்திரத்தில் துரியோதனன் படுகளம்

திருநாவலூா் பக்தஜனேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

