மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மண்டகொளத்தூா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:32 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

மண்டகொளத்தூா் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

அன்று முதல் தினமும் இரவு சந்தனபிரபை, பூதவாகனம், நாகவாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 7-ஆம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் தேரில் எழுந்தருளி தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்தத் தேரோட்டத்தில் வீடுதோறும் பக்தா்கள் கற்பூர தீபாரதனை காட்டி சுவாமியை வழிபட்டனா்.

வழிநெடுகிலும் பக்தா்களுக்கு நீா் மோா், குளிா்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டகொளத்தூா், ஓடநகரம், அரும்பலூா், வம்பலூா், மொடையூா், மட்டபிறையூா், கொம்மனந்தல் என சுற்றுப்புறக்

கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.