செய்யாறு இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஆலோசகா்களுக்கான பரிசளிப்பு விழா என இருபெரும் விழாவாக நடைபெற்றது.
இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் மு.அஞ்சுகம் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு மாவட்டக் கல்வி அலுலா் எஸ்.செந்தில்முருகன் பங்கேற்று, பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் க.கோவேந்தன் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நிறைவு பாராட்டு விழா

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

