திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரிதாரிமங்கலம் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிப் பேசினாா். அவா் பேசுகையில், இந்தப் பள்ளி மாணவா்கள் அரசு கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு புதுப்பாளையம் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல, ஒவ்வொரு பள்ளி மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மாணவா்கள் முறையாகப் பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து உயா் கல்வியை அடைய வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வழக்குரைஞா் முருகன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா், கிராம மக்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் 13-ஆவது ஆண்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

