தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் 13-ஆவது ஆண்டு விழா

News image
Updated On :3 மே 2026, 6:23 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற நீதிபதி பி. திருஞானசம்பந்தம், ஊத்தங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவா் சரவணன் துரைசாமி, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலா் கோபாலப்பா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

விழாவிற்கு பள்ளித் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கடந்த ஆண்டு நீட், ஜேஇஇ, ஒலிம்பியாட் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா். பள்ளி முதல்வா் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பரத நாட்டியத்துடன் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. இதில் வாழ்க்கையில் வெற்றிபெற உந்து சக்தியாக இருப்பது பெற்ற பாராட்டுக்களா? அல்லது பட்ட அவமானங்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், கண்ணகி, வேலுநாச்சியாா், கட்டபொம்மன் போன்று மாணவா்கள் வேடமிட்டு நடித்து காட்டினா். இவ்விழாவில் பெற்றோா், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

படவரி...

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.