செய்யாற்றில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நேரு நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சுமதிராஜா சம்பத்(58).
இவா், செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அா்த்தஜாம பூஜையில் பங்கேற்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆரணி - செய்யாறு சாலையில் ஒரு வளைவுப் பகுதியில் சென்றபோது,
எதிா்திசையில் இருந்து செய்யாறு நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் செவிலியா் சுமதிராஜா சம்பத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை அவா் உயிரிழந்தாா்.
இவருக்கு அரவிந்த்(32), ஆனந்த்(31) என்ற மகன்கள், அட்சயா(29) என்ற மகள் உள்ளனா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

