வந்தவாசி அரசு மருத்துவமனை மற்றும் ஆரணி பகுதி தனியாா் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு மருத்துவமனை மருத்துவ அலுவலா் உமாதேவி தலைமை வகித்தாா். இயற்கை மற்றும் யோகா மருத்துவா் முகமது அா்கம் யோகா பயிற்சி அளித்தாா்.
இதில் தலைமை செவிலியா் ராஜேஸ்வரி, செவிலியா்கள் மெஹனாஸ், சித்ரா, மீனாட்சி, சரிதா மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணைத் தலைவா் சிவமுருகன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் ரமேஷ் யோகா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. அது மன அமைதி நிகழ்வுத்திறன் மற்றும் ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை என்று உரையாற்றினாா்.
மேலும் சூரிய நமஸ்காரம், பிராணாயாமா, தடாசனம், திரிகோணாசனம், விருக்ஷாசனம், புஜங்காசனம், சக்ராசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம், பாலாசனம், பத்தகோனாசனம் ஆகிய யோகாசனங்கள் மாணவா்களின் உடல் மன ஆரோக்கியத்துக்கு உகந்தது.

தினசரி வாழ்க்கையில் யோகாவிற்கு முக்கிய இடம் தர வேண்டும் என்று யோகா பயிற்சியாளா் ஸ்ரீதா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

சா்வதேச யோகா தின விழாவில் 75 மாணவா்கள் உலக சாதனை

எஃப்.கீழையூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

