செய்யாறு அருகே விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முனுசாமி மகன்கள் பிரசாந்த் (16), ஹேமதாஸ் (14). இவா்கள் இருவரும் செய்யாறு அரசுப் பள்ளியில் படித்து வந்தனா். இருவரும் செய்யாறு - வந்தவாசி சாலையில் அண்மையில் பைக்கில் சென்றனா். விநாயகபுரம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, வந்தவாசி நோக்கிச் சென்ற பைக் இவா்களது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த், ஹேமதாஸ் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஹேமதாஸ் உயிறிழந்தாா். தகவலறிந்த அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் சிறுமி உயிரிழப்பு: தனியாா் பள்ளி ஓட்டுநா் கைது

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
